Showing posts with label நட்பு. Show all posts
Showing posts with label நட்பு. Show all posts

நட்பு

என் கவிதைகளை படித்த பலர் என்னை பார்த்து
"என்ன காதல் தோல்வியா" என்று
கேட்கிறார்கள்....
அவர்களுக்கு நான் எப்படி புரிய வைப்பேன்,
என் கவிதைகளுக்கு காரணம் காதல் அல்ல 
நட்பு என்று ???

நட்பு

ஒன்றாக படித்த பொழுது புழுதி பறக்கும் சாலைகளில்
முகத்தில் மண் கலந்த காற்று அடிக்க சிரித்து மகிழ்ந்த
காலம் எங்கே ?

இப்போது A/C அறையில் உட்கார்ந்து மெயில் அனுப்பி
உறவாடும் நட்பு எங்கே?

மீண்டும் கிடைக்குமா அந்த போர்க்காலம் :( :( :(

நட்பு

நண்பா உண் நட்பு எனும் கூண்டில் 
மாட்டி கொண்ட பறவை  நான்.
பறக்க சிறகுகள் இருந்தும்
மனம் இல்லை உன்னை விட்டு பிரிய.......
                      

நட்பு

காற்றை நேசித்தேன் நின்று போனது...........
விடியலை நேசித்தேன் இருட்டி போனது ........
பறவைகளை நேசித்தேன் பறந்து போனது.......
நிலவை நேசித்தேன் தேய்ந்து  போனது........
அலைகளை நேசித்தேன் ஓய்து போனது.......
நதிகளை நேசித்தேன் நின்று போனது......
பனி துளியை நேசித்தேன் உடைந்து போனது......
நட்சத்திரங்களை நேசித்தேன் மறைந்து போனது....
நண்பனை நேசித்தேன் இழந்த அனைத்தும்
ஒன்றாய் கிடைத்தது :).............

வணக்கம்

என் வலைப்பூவிற்கு வந்துள்ள உங்களை மனமார வரவேற்கிறேன்!

என்னை பற்றி !

My photo
சிறிது அறிவும், நகைச்சுவை உணர்வும், ரசனையான வாழ்வும் சேர்ந்த சித்திரம்!