Showing posts with label கவிதைகள். Show all posts
Showing posts with label கவிதைகள். Show all posts

காலில் விழுந்த கடவுள்

கதறி அழுது கொண்டிருந்தேன்
கடவுள் வந்தார் அவ்வழியே,
கனிவாய் ஆறுதல் தந்து
கஷ்டங்களைப் போக்குவதாகச் சொன்னார்.
கையெடுத்துக் கும்பிட்டுச் சொன்னேன்
என்னிலும் ஏழைகள் ஆயிரம்,
தன்ன்னம்பிக்கை இல்லா தற்குறிகள் பலகோடி
அவரிடம் காட்டிக் கொள் உன் தயவை,
என்னை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று .
காலில் விழுந்த கடவுள்
வந்தவழி சென்றார்.

வாழ்க்கை

எதையோ சொல்லிக்கொண்டுதான் இருக்கிறது வாழ்க்கை, எனக்குத்தான் புரியவில்லை...!

பைத்தியக்காரன்

எட்டாத உயரத்தில் இருக்கும் நிலாவை ஏக்கத்தோடு பார்க்கும் பைத்தியக்காரன் நான்...!

வேலை

உன்னால் தினமும் உறக்கத்தை தொலைத்து கொண்டு இருக்கிறேன், அதை தேட கூட நேரம் இல்லாமல் தவிக்கிறேன்  :( :( :(

தமிழினை மறந்திடாதே

பல மொழிகள் வந்தாலும்,
புதிய மொழிகள் புகுந்தாலும்,
தமிழனே நீ மறந்திடாதே
உன்னை ஈன்றெடுத்த
தமிழ் மண்ணின் செம்மொழியான
தமிழினை நீ மறந்திடாதே...!

தனிமை

என் தனிமை காட்டில் பொழிகிறது கண்ணீர் மழை தினம் தினம் . ஒவ்வொரு துளியும் பிரதிபலிக்கிறது உன் நினைவுகளை :( :( :(

குழந்தை

மழலை குழந்தைகளின் சிரிப்பில் இறைவனை காணும் வரம், எந்த கோவிலுக்கு சென்றாலும் வராது...!

வாழ்க்கை

விரட்டிக் கொண்டேயிருக்கிறது வாழ்க்கை, நின்று எதிர்க்க எத்தனை தடவை நினைத்தும், முடியாமல் ஓடிக் கொண்டேயிருக்கிறேன் நான் ...!

என் இதயம்

உன்னை சுகமாய் சுமப்பதாக சொல்லி கொண்ட  என் இதயம் , நீ எனக்கு இல்லை என்றதும் கனக்கிறதே ஏன்?

நினைவுகள்

மழைத்துளிகள் மண்வாசனையை எழுப்பி விடுவதுபோல.
இருவுகளில் உன்னை பற்றிய நினைவுகளும், கனவுகளும் 
என் காதலை எழுப்பிவிடுகிறது :) :) :)

குசும்பு

உன்னை பற்றி நான் கவிதை எழுத பயன்படுத்திய பேனாவும், என் கவிதையை படித்துவிட்டு அழுகிறது, ஆனால் இந்த உலகமோ " Pen ல ink லீக் ஆவுதுடா முண்டம் என்று திட்டுகிறது...!!

மழை

எத்தனை முறை ரசித்தாலும் ஒவ்வொரு முறையும் புதிதாய் தெரியும் மழை போலவே, நீயும் :) :) :)

நட்பு

என் கவிதைகளை படித்த பலர் என்னை பார்த்து
"என்ன காதல் தோல்வியா" என்று
கேட்கிறார்கள்....
அவர்களுக்கு நான் எப்படி புரிய வைப்பேன்,
என் கவிதைகளுக்கு காரணம் காதல் அல்ல 
நட்பு என்று ???

என் தந்தை


உங்கள் கை பிடித்து நடை பழகவில்லை,
கருத்துக்களை அதிகம் பகிர்ந்ததில்லை,
அன்பாய் அதிகம் பேசியதில்லை,
அன்று நான் வாங்கிய அடிகளுக்கு
இன்றுதான் அர்த்தம் புரிகிறது, நீங்கள்
என்னை அடிக்கவில்லை செதுக்கி
உள்ளீர்கள் என்று.......
உங்களை இதுவரையில் அண்ணாந்து பார்த்தே
வளர்ந்து விட்டேன். இன்று பார்க்கையிலும்
உங்கள் உயரம் உயருது....

வேறுபட்ட தந்தைகளுள் என் தந்தையும் ஒருவர் :) :) :)

காதல்

காத்திருப்பது சுகமானது, கடவுளுக்காக மட்டுமல்ல
காதலுக்காகவும் :) :) :)

நட்பு

ஒன்றாக படித்த பொழுது புழுதி பறக்கும் சாலைகளில்
முகத்தில் மண் கலந்த காற்று அடிக்க சிரித்து மகிழ்ந்த
காலம் எங்கே ?

இப்போது A/C அறையில் உட்கார்ந்து மெயில் அனுப்பி
உறவாடும் நட்பு எங்கே?

மீண்டும் கிடைக்குமா அந்த போர்க்காலம் :( :( :(

காதல்

புதியதாக ஒரு புத்தகம் படிக்க தொடங்கி உள்ளேன்
முகப்பில் அவளின் பெயர் !!!

பூக்கள்

பூக்கள் கண்ணீர் சிந்துவதை கண்டேன், பள்ளி செல்லும் குழந்தைகள் :) :) :)

குப்பை தொட்டி

தாலாட்ட தாய் இல்லாமல் தவித்த குழந்தைக்கு மடி கொடுத்து தாங்கி நின்ற புதிய தாய்

அனாதை

அனாதைகள் கடவுளின் குழந்தைகள் எனில்,
குடும்ப கட்டுப்பாடு செய்ய வேண்டும்
கடவுளுக்கு. -
கமலஹாசன்

வணக்கம்

என் வலைப்பூவிற்கு வந்துள்ள உங்களை மனமார வரவேற்கிறேன்!

என்னை பற்றி !

My photo
சிறிது அறிவும், நகைச்சுவை உணர்வும், ரசனையான வாழ்வும் சேர்ந்த சித்திரம்!