Posted by
Anandhan Rajaraman
Thursday, August 28, 2014
கதறி அழுது கொண்டிருந்தேன்
கடவுள் வந்தார் அவ்வழியே,
கனிவாய் ஆறுதல் தந்து
கஷ்டங்களைப் போக்குவதாகச் சொன்னார்.
கையெடுத்துக் கும்பிட்டுச் சொன்னேன்
என்னிலும் ஏழைகள் ஆயிரம்,
தன்ன்னம்பிக்கை இல்லா தற்குறிகள் பலகோடி
அவரிடம் காட்டிக் கொள் உன் தயவை,
என்னை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று .
காலில் விழுந்த கடவுள்
வந்தவழி சென்றார்.
Posted by
Anandhan Rajaraman
Sunday, August 12, 2012
எதையோ சொல்லிக்கொண்டுதான் இருக்கிறது வாழ்க்கை, எனக்குத்தான் புரியவில்லை...!
Posted by
Anandhan Rajaraman
Wednesday, August 1, 2012
உலகின் முக்கியமான பெரிய மதங்களில் இஸ்லாமும் ஒன்று. இஸ்லாம் மதத்தை
தோற்றுவித்த முகமது நபி (நபிகள் நாயகம்) அரபு நாட்டில் உள்ள மெக்காவில்
கி.பி 571 -ம் ஆண்டு ஏப்ரல் 20 -ம் தேதி பிறந்தார். தந்தை பெயர் அப்துல்லா,
தாயார் ஆமினா.
நபிகள் நாயகம் பிறப்பதற்கு சில நாட்களுக்கு முன் அவருடைய தந்தை இறந்துவிட்டார். சில ஆண்டுகளுக்கு மின்னார் தாயாரும் மறைந்தார். எனவே
முத்தலிபு என்ற பாடனாராலும், பின்னர் அபுதாலிப் என்ற பெரிய தந்தையாலும்
வளர்க்கப்பட்டார். முறையான கல்வி பயிலாவிட்டாலும், சீரிய ஒழுக்கமும்,
நற்பண்புகளும் கொண்டர்வராக நபிகள் நாயகம் திகழ்ந்தார். இளமையில் அவர் பல
துயரங்கள் அனுபவித்தாலும் வர்த்தகம் செய்வதற்காக பல பகுதிகளுக்கு சென்று
வந்ததால், வாழ்க்கை அனுபவங்கள் பல பெற்றார்.
மக்களுக்கு தொண்டுகள் புரிந்தார்.
அவருடைய 25 -வது வயதில் கதீஜா என்ற 40 வயது பணக்கார விதவை பெண்ணை மணந்தார். பின்னர்
சமூக சேவை ஆன்மிகச் சிந்தனைகளில் ஈடுப்பட்டார். அடிக்கடி ஹீரா மலைக்கு
சென்று தியானத்தில் ஆழ்ந்தார். ஆன்மிக உணர்வு பெற்றார்.
"இறைவன் ( அல்லாஹ ) ஒருவனே, அவனுக்கு இணை, துணை யாரும் இல்லை. அவனையே
வணங்கவேண்டும்" என்று போதித்தார். அக்கால அரபியர்கள் பல உருவங்களை கடவுளாக
வணங்கிவந்தனர். அதற்க்கு எதிராக கருத்துக்களை சொன்னதால், நபிகள் நாயகத்தை
எதிர்க்கவும் தாக்கவும் செய்தனர். அவர் தனது கொள்கைகளை விளக்க முற்பட்டபோது
அவரை கல்லால் அடித்தனர். கி.பி 622 -ம் ஆண்டு தமது ஆதரவாளர்கள் சிலருடன்
யத்ரிப் என்ற இடத்திற்கு சென்றார். இந்த பயணம் " ஹிஜ்ரா " என்று
குறிப்பிடபடுகிறது. யத்ரிப் மக்கள் நபிகள் நாயகத்தை வரவேட்றனர். யத்ரிப்
நகரின் பெயரை " மனிததுன்நபி " (நபிகள் நகரம்) என்று மாற்றினர். இதுவே பிறகு
" மதினா ' ஆயிற்று. அனால் அங்கும் பின்பு எதிர்ப்பு தோன்றியது. அவரை
அழிப்பதற்கு ஒரு படையை மன்னர் அனுப்பினார். அந்த படையை நபிகள் நாயகம்
தோற்கடித்தார். பின்னர் மெக்கா நகருக்கு சென்றார். அங்கு தமது கொள்கைகளை
போதித்தார். மக்கள் அதனை ஏற்றனர்.
மெக்காவில் வெற்றி கண்ட பிறகு மதினாவில் வாழ்ந்தார். இஸ்லாம் வேகமாக
பரவியது. மீண்டும் மெக்காவிற்கு ஹஜ் யாத்திரை சென்ற நபிகள் நாயகம், கி பி
632 ஜூன் 8 -ம் தேதி மறைந்தார். இஸ்லாம் என்ற சொல்லுக்கு, "இறைவனை
பணிந்து வழிபட்டு சாந்தியடைதல்" என்று பொருள். இஸ்லாமை பின்பற்றுபவர்கள்
முஸ்லிம்கள். "முஸ்லிம்" என்றல் இறைவாக்கு அடிபணிபவர் என்று பொருள்.
இறைதூதர் நபிகள் நாயகதிரிக்கு, வானவர் "ஜிப்ரீல்" மூலமாக இறைவனால்
அருளப்பட்ட தெய்வ செய்திகளே ''திருக்குர்ஆன்" ஆகும். இதில் 115
அத்தியாயங்கள் உள்ளன.
"இறை நம்பிக்கை (ஈமான்) தொழுகை, ஜகாத், நோன்பு, ஹஜ்" ஆகிய ஐம்பெரும்
தூண்களால் எழுதப்பட்ட மாளிகையே இஸ்லாம். இறைவன் ஒருவனே என்று உறுதிகொள்வது,
தினமும் 5 வேளை தொழுவது, 2 1/2 சதவிதம் ஏழைவரி அளிப்பது, ரமலான் மாதம்
முழுதும் நோன்பு இருப்பது வாழ்கையில் ஒரு முறையேனும் மெக்கா சென்று ஹஜ்
செய்வது ஆகியவையே இஸ்லாம் மதத்தின் கடைமைகள் ஆகும்.
நபிகள் நாயகம்
வாழ்ந்த பொது அவர்களின் வாக்கும், வாழ்ந்தமுறையும் பதிவு செய்யப்பட்டன.
அதுவே " ஹதிஸ் " (நபிகளின் பொன்மொழிகள்) என்று அழைக்கபடுகிறது. நபிகள்
நாயகம் அராபிய நாட்டில் தோன்றினாலும் அவர், அகில உலகிற்கும் ஓர் அருட்கொடை
என்று திருகுரான் கூறுகிறது. தம் வாழ்நாளில் ஒரு கொள்கையைப் பிரசாரம்
செய்யத் தொடங்கி 24 ஆண்டுகளில் தம்மை பின்பட்ட்ரும் ஒரு பெரும்சமுதாயத்தை
உருவாகிய சாதனை சரித்திரம் நபிகள் நாயகம் அவர்களுக்கே உரியது.
Posted by
Anandhan Rajaraman
Tuesday, July 24, 2012
மத்திய காலத்தில் ஐரோப்பாவில் கிறிஸ்துவர்கள் மிகுந்திருந்தனர். இயேசு
கிறிஸ்துவுடன் தொடர்புள்ள இடங்கள், புனித இடங்களாக கருதப்பட்டன. அந்த
இடங்களுக்கு யாத்திரை செல்வதை கிறிஸ்துவர்கள் புனிதமாக கருதினர்.
கி.பி. 637 -ல் ஜெருசலேமை முஸ்லிம்கள் கைபற்றினர். எனினும், ஆட்சி
நடத்திவந்த கலிபாக்கள் மத நல்லிணக்கத்துடன் செயல்பட்டதால்,
கிறிஸ்துவர்களுக்கு எந்த பிரச்னையும் எழவில்லை.
கி.பி 1086
-ல் துருக்கியர்களின் வசம் ஜெருசலேம் கைமாறியதும் பிரச்சனை எழுந்தது. புனித
திருத்தலங்களுக்கு சென்ற கிறிஸ்துவர்கள் கொடுமைப் படுத்தப்பட்டனர்.
தேவாலயங்கள், குதிரை லாயங்கலாக மாற்றப்பட்டன. இதனால் கிறிஸ்தவர்கள்
ஒன்றுகூடி புனித ஸ்தலங்களை மீட்க போர் தொடுக்க தீர்மானித்தனர். ஐரோப்பாவில்
உள்ள கிறிஸ்துவர்கள், திருசபயினர், மன்னர்கள், மதத்தலைவர்கள் இதில் பங்கு
கொண்டனர்.
முதலாம் சிலுவை போர்
இது 1907 -ம் ஆண்டில் நடந்தது. இதில்
சுமார் 40 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். ஆனால், இவர்கள் முறையான பயிற்சிகள்
பெறாதவர்கள். எனினும் ஜெருசலேமை இவர்கள் கை பற்றினர். சுமார் 80 ஆண்டுகள்
ஜெருசலேம் கிறிஸ்துவர்கள் ஆதிக்கத்தில் இருந்தது.
இரண்டாம் சிலுவை போர்
கி.பி 1101 -ம் ஆண்டில் ஜெருசலேம் அரசர் மரணம் அடைந்தார், குழப்பங்கள்
ஏற்பட்டன. கிறிஸ்துவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் நடந்த போரில்
முஸ்லிம்கள் வெற்றிபெற்றனர். 1187 -ல் சலாடின் என்ற போர் வீரர், ஜெருசலேமை
கைப்பற்றி அதன் சுல்தானாக பொறுபேற்றார். சுமார் 50 ஆண்டு காலம் ஜெருசலேம்
முஸ்லிம்கள் வசம் இருந்தது.
மூன்றாம் சிலுவை போர் ( கி.பி 1189 - 1192 )
இதில் ஐரோப்பிய மன்னர்கள் பலர் கலந்து கொண்டனர். இதில் கிறிஸ்துவர்களுக்கு
தோல்வி ஏற்பட்டது. ஆயினும், சிறிய கடற்கரை ஓரமான, ஜெருசலேமிற்கு
கிறிஸ்துவர்கள் செல்லலாம் என்று உடன்பாடு ஏற்பட்டது. நூறு ஆண்டுகளுக்குப்
பின், கிறிஸ்துவர்கள் பாலஸ்தீனத்தில் இருந்தும் சிரியாவில் இருந்தும்
வரட்டி அடிக்கப் பட்டனர்.
நான்காம் சிலுவைப் போர் ( கி.பி 1203 )
கி.பி 1203 -ல் இஸ்தான்புல் நகரை கிறிஸ்துவர்கள் கைப்பற்றினர். அனால் அதை
முஸ்லிம்கள் மீட்டனர். 1212 -ம் ஆண்டில் பிரான்ச் நாட்டில் ஆடு பெயப்பவனாக
இருந்த ஸ்டீபன் என்பவன், " துரிகியர்களை அழிக்க கடவுளால் அனுப்பப்பட்டவன்
நான்" என்று கூறிக்கொண்டு, சுமார் 30 ஆயிரம் சிறுவர், சிறுமிகளை கொண்ட
படையை திரட்டினான். இரண்டு கப்பல்களில் இந்த படை கிளம்பியது. அனால், இந்த
இரண்டு கப்பல்களும் கடலில் மூழ்கின. உயிர் பிழைத்து நீந்தி கரை
சேர்ந்தவர்களும் அடிமைகளாக விற்கப்பட்டனர். இந்த நிகழ்ச்சி "குழந்தைகள்
சிலுவை போர்" என்று வரலாற்றில் குறிப்பிடப்படுகிறது.
கடைசி சிலுவைப் போர் ( கி.பி 1683 )
போப் ஐந்தாம் பயஸ் இதனை தொடங்கி வைத்தார். ஸ்பெயின், வெனிஸ் ஆகியவற்றுடன்
சேர்ந்து ஆதரவாளர்களை திரட்டினார். லேப்பண்டோ குடா என்ற இடத்தில்,
முஸ்லிம்களின் கப்பல் படை தோற்கடிக்கப் பட்டது. போப் பைஸ், ௧௬ ஆண்டுகள்
போர் புரிந்து, வெனிஸ், போலந்து, ஆஸ்திரியா, ரஷ்யா, பிரான்ஸ் உதவியுடன்
துர்க்கியர்களை வெளியேற்றினார். இதன் மூலம் தான் போப் ஆண்டவரின் செல்வாக்கு
ஓங்கியது.
Posted by
Anandhan Rajaraman
எட்டாத உயரத்தில் இருக்கும் நிலாவை ஏக்கத்தோடு பார்க்கும் பைத்தியக்காரன் நான்...!
Posted by
Anandhan Rajaraman
Friday, July 20, 2012
உன்னால் தினமும் உறக்கத்தை தொலைத்து கொண்டு இருக்கிறேன், அதை தேட கூட நேரம் இல்லாமல் தவிக்கிறேன் :( :( :(
Posted by
Anandhan Rajaraman
Wednesday, July 18, 2012
( நமது வலைப்பூவின் Likes எண்ணிக்கை நூறை எட்டியுள்ளது. Likes கொடுத்த
மற்றும் பின்பற்றும்நல்ல உள்ளங்களுக்கு நன்றி. மிக விரைவில், எனக்கு சிறிது அளவு
பரிட்சய பட்ட " .net -ஐ " தமிழில் கற்க ஒரு புதிய வலைப்பூவை தொடங்க
உள்ளேன். இணைந்திருங்கள் )
 |
|
கிரேக்க மன்னரான அலெக்சாண்டர், உலகில் இதுவரை தோன்றிய மாவிரர்களில்
தலைசிறந்தவராக போற்றப்படுகிறார். 20 வயதில் மன்னராகி 32 வயதுக்குள் பல
நாடுகளை வென்ற அலெக்சாண்டர், வரலாற்றில் அழியா இடம் பெற்றவர்.
கிரேக்கத்தில் மாசிடோனியா நாட்டை ஆண்டு வந்த பிலிப் என்ற மன்னரின் மகன் அலெக்சாண்டர். அவர் கி.மு. 356 -ம் ஆண்டில் பிறந்தார். சிறுவயதிலேயே சிறந்த வீரராக திகழ்ந்தார். குதிரை சவாரி செய்வதில் அவருக்கு எவரும் நிகரில்லை என்று புகழ் பெற்றவர்.
கிரேக்க நாட்டின்
மாபெரும் சிந்தனையாளர்களில் ஒருவரான அரிஸ்ட்டாட்டில் அலெக்சாண்டரின்
குருவாக அமர்த்தப்பட்டார். இதனால் அலெக்சாண்டர் சிறந்த வீரராக மட்டும்
இன்றி சிறந்த ராஜதந்திரியாகவும், நீதிமானாகவும் திகழ்ந்தார்.
பிலிப் மன்னர் ஒரு போரில் கொலை செய்யப்பட்டார். அதை தொடர்ந்து அலெக்சாண்டர் மன்னரானார்.அப்போது அவருக்கு வயது 20.நாட்டின் வடப்பகுதியில் அப்போது கலவரங்கள் நடந்தது.அலெக்சாண்டர் அதை
அடக்கினார். கிரேக்கம் முழுவதும் அவர் ஆட்சிக்குள் வந்தது. கிரேக்க நகரத்தை
வெளி நாடுகளிலும் பரப்ப நினைத்த அலெக்சாண்டர் பாரிஸ் மீது படை எடுத்தார்.
அவருடைய படையில் 20 ஆயிரம் காலாட்படையும், 5 ஆயிரம் குதிரை படையினரும்
இருந்தனர். பாரிஸ் மன்னர் தோல்வி அடைந்தார். சிறை பிடிக்க பட்ட அவருடைய
தாயையும் , மனைவியையும் கண்ணியத்துடன் நடத்தினார் அலெக்சாண்டர். பிறகு
சிரியா, எகிப்த் ஆகிய நாடுகளை கைப்பற்றினார். எகிப்தில் தன் பெயரில்
அலேக்சன்றியா என்ற நகரத்தை உருவாக்கினார். அவர் வென்ற நாடுகளில் எல்லாம் கிரேக்கர்களை குடியேற செய்தார்.
கிரேக்கர்களுக்கு பாரசிக பெண்களை திருமணம் செய்துவைத்தார். பிறகு
ஆப்கானிஸ்தானை கைபற்றிய அலெக்சாண்டரின் பார்வை இந்தியா பக்கம் திரும்பியது.
அந்த சமயத்தில் இந்தியாவில் சிந்து சமவெளி பகுதியை பல சிற்றரசர்கள் ஆண்டு
வந்தனர். அலெக்சாண்டர் கி. மு. 326 -ல் சிந்து ஆற்றை கடந்து
இந்தியாவிற்குள் நுழைந்தார். அலெக்சாண்டரின் போர் திறனை நன்கு அறிந்திரிந்த தட்சசீல மன்னன், அவரை
வரவேற்று நட்பு கொண்டான். ஆனால் புருசோதமர் என்ற மன்னன் அலெக்சாண்டரை
எதிர்த்தார். ஜீலம் நதி கரையில் இரு படையினரும் மோதினர். அதில் வழக்கம்
போல் அலெக்சாண்டர் வென்றார்.
தோல்வி அடைந்த புருஷோதமரை பார்த்து " நான் உங்களை எவ்வாறு நடத்த வேண்டும்
என்று நினைகிறிர்கள் " என்று அலெக்சாண்டர் கேட்டார். "என்னை ஒரு அரசன் போல
நடத்த வேண்டும்"என்று புருசோதமர் தைரியமாக கூறினார். அவருடைய வீரத்தை
பாராட்டிய அலெக்சாண்டர் தான் கைப்பற்றிய நாட்டை புருஷோதமருக்கே திருப்பி
கொடுத்தார். மேலும் பல நாடுகளை வெல்ல வேண்டும் என்று அலெக்சாண்டர் விரும்பினார். அனால்
பல ஆண்டுகள் போர் புரிந்து சலித்து போன போர் வீரர்கள் தாய்நாட்டிற்கு செல்ல
வேண்டும் என்று கழகத்தில் ஈடுப்பட்டனர். இதனால் அலெக்சாண்டர் வேறு வலி
இன்றி கிரேக்கம் திரும்பி செல்ல முடிவு செய்தார். போர் வீரர்கள் பலர் தரை
வழியாகவும், சிலர் கடல் வழியாகவும் தாயகம் திரும்பினர். அலெக்சாண்டர் தரை
மார்கமாக திரும்பி சென்ற போது, பாபிலோன் நகரில் விஷ ஜுரம் வந்து மரணம்
அடைந்தார். அப்போது அவருக்கு வயது 32.
Posted by
Anandhan Rajaraman
Monday, July 16, 2012
( நண்பர்களே போன இடுக்கையில் உலகம் தோன்றியது எப்போது என்றும் மனிதனின்
நாகரிகம் பற்றியும் தெரிந்து கொண்டோம். இந்த இடுக்கையில் மொழிகளின்
தோற்றம் பற்றி காண உள்ளோம். இணைந்திருங்கள் )
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்களுக்கு எழுத தெரியாது. ஏனென்றால் அப்பொழுது எழுத்துக்களோ, மொழிகளோ உருவாகவில்லை.
தங்கள்
எண்ணங்களை வெளிப்படுத்த செய்கைகளை பயன்படுத்தினார்கள். பின்னர் படங்களை
காட்டினர். உந்தாரனமாக ஒரு புலியை பற்றிய தகவலை தெரிவிக்க, புலியின்
உருவத்தை காட்டினர்.
ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எகிப்திலும், மேசப்போடோமியாவிலும் வாழ்ந்து
வந்த மக்கள் இப்படிதான் செய்து வந்தனர். அவர்கள் வரைந்த இந்த உருவங்களுக்கு
" பட எழுத்துக்கள் " என்று பெயர். எகிப்தில் உள்ள பிரமீடுகளிலும் பட
எழுத்துக்களை இன்றும் காணலாம். காலப்போக்கில் பட எழுத்துக்களில் இருந்து
"குறி எழுத்துக்கள்" பிறந்தன. மரம் என்ற சொல்லைக் குறிப்பதற்கு மரம் போல
படத்தை வரையாமல், ஏதேனும் குறி ஒன்றை எழுதும் வழக்கம் வந்தது. பேச்சில்
வரும் ஆயிரக்கணக்கான சொற்களுக்கு ஆயிரக்கணகான குறிகள் எழுதப்பட்டன.
பழங்காலத்தில் வாழ்ந்த பாபிலோனியர்களும், ஆசாரியரும் எழுதிய குறி
எழுத்துக்கள், உளி வெட்டுக்கள்போல காணப்பட்டன.
சீன மொழிகள் எழுத்துக்கள் குறிஎலுத்துக்கலாகும் அம்மொழியில் 5000 திற்கும்
மேற்பட்ட குறி எழுத்துக்கள் உள்ளன. குறி எழுத்துக்களை கற்பதும், எழுதுவதும்
எளிதல்ல. மேல்நாட்டில் முதன் முதலாக எழுத்துக்களை எழுத கற்றுக்
கொண்டவர்கள் பெணீசியர்கள். இவர்கள் 4000 ஆண்டுகளுக்கு முன் சிரியாவில்
வாழ்ந்தவர்கள். இவர்களிடம் இருந்து கிரேகர்கள் எழுத்துக்களை
கற்றுக்கொண்டார்கள். கிரேகர்கள் அந்த எழுத்துக்களை ரோமானியர்களுக்கு
கற்றுத்தந்தனர்.
இந்திய மொழிகள்

இந்தியாவில்
பேசப்படும் மொழிகள் எழுத்துக்கள் யாவும் இரு மொழி குடும்பங்களில் அடங்கும்.
ஒன்று ஆரிய மொழி குடும்பம், இதன் ஆதி மொழி சமஸ்கிரதம். மற்றொன்று திராவிட
மொழி குடும்பம். இதன் ஆதி மொழி தமிழ்.
தமிழுக்கும், சமஸ்கிரததிர்க்கும் தனிதனி எழுத்துக்கள் உண்டு. ஆயிரம்
ஆண்டுகளுக்கு முன்னர் "வட்டெலுதுக்கள்" என்ற தமிழ் எழுத்துக்கள்
புழக்கத்தில் இருந்தன. இந்த எழுத்துக்கள் வட்ட வடிவத்தில் இருக்கும்.
சமஸ்கிரதம்,
கன்னடம், தெலுங்கு போன்ற மொழில்களில் கூட்டெலுதுக்கள் உண்டு. இவை இரண்டு
மூன்று எழுத்துக்கள் சேர்ந்து ஒலிக்கும். ஆனால் தமிழில் கூட்டெலுதுக்கள்
கிடையாது. தமிழ் எழுத்துக்களின் ஒலிகள் எவ்வாறு பிறக்கின்றன, இந்த
எழுத்துக்கள் சொல்லில் எவ்வாறு சேருகின்றன என்பதற்கு, "தொல்காப்பியம்"
என்னும் பழம்தமிழ் இலக்கணத்தில் விதிகள் உண்டு.
காகிதம்
பழங்கால மக்கள் கருங்கற்கள் மீதும் சுவர்களின் மீதும் எழுத்துக்களை
செதுக்கினர். பிறகு பதபடுத்தபட்ட தோலின் மீதும், மரப்பட்டைகளின் மீதும்,
பானை ஓடுகளின் மீதும், பனை ஓலைகளிலும் எழுதும் வழக்கம் வந்தது. இந்தியாவில்
மக்கள் எப்போது எழுத்துக்கள் கட்டரு கொண்டனர் என்று திட்டவட்டமாக
கூறமுடியாது. ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சிந்துசமவெளி மக்கள் களிமண்
பலகைகளில் எழுதி வந்தனர்.
தமிழ் மிக பழமையான மொழிகளில் ஒன்று.
அதில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மிக சிறந்த இலக்கியங்கள்
தோன்றியுள்ளன. எனவே தமிழ் மக்கள் அதற்க்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே
எழுத்துக் கலையை நன்கு அறிந்திருக்க வேண்டும். பழங்காலத்தில் தமிழ்
நூல்கள், பனை ஓலையில் எழுதப்பட்டன. எழுதும் ஓலையை தேர்ந்தெடுத்து, அதை
ஒழுங்காக வாரிக் கட்டுவதே ஒரு கலையாக இருந்தது.

மன்னர்கள் கட்டிய
அணைகள், சுட்ருசுவர்கள் மீதும் செப்பேடுகளிலும் எழுதப்பட்டன. அயல் மொழியின்
கருத்துக்களும், சொற்களும் தமிழில் கலந்தன. இதனால் கடந்த இரண்டாயிரம்
ஆண்டுகளில் தமிழ் எழுத்துக்களை எழுதும் முறையில் பல மாறுபாடுகள் ஏற்பட்டன.
அச்சு எந்திரங்கள் வந்த பிறகு தமிழ் மொழியின் வடிவங்கள் மாறாமல் இருந்து
வருகிறது.
தமிழ், ஆங்கிலம் உட்பட பெரும்பாலான மொழிகள் இடமிருந்து வலமாக எழுதப்படுகின்றன. உருது எழுத்துக்களையும், அரேபிய எழுத்துக்களையும் வலமிருந்து இடமாக எழுதுகிறார்கள். சீனர்கள் மேலிருந்து கீழாக எழுதுகின்றனர்.
.
Posted by
Anandhan Rajaraman
Sunday, July 15, 2012
( நண்பர்களே இதுவரை நமது வலைப்பூவில் எனது கவிதைகளையும் நான் படித்ததில்
பிடித்த சில தொகுப்புகளை மட்டுமே வெளியிட்டு வந்தேன். இன்று முதல் சுவடுகள் என்னும் தலைப்பில், உலகம் தோன்றியது முதல் இன்றுவரை நடந்த சில வரலாற்று
சுவடுகளை உங்களுடன் பகிர்துகொள்ள கொள்ள விரும்புகிறேன். இணைந்திருங்கள். )

ஏறத்தாள 450 கோடி ஆண்டுகளுக்கு முன் பூமி தோன்றியதாக ஆராய்ச்சியாளர்கள்
கருதுகிறார்கள். சூரியனில் இருந்து பிரிந்து வந்த பொருள் இறுகி,
பூமியாகியது. ஆரம்பத்தில் பூமியும் சூரியனை போல சுடும் வெப்பத்துடன்
இருந்தது. பிறகு வெப்பம் குறைந்து பூமி மீது மழை பொழிய தொடங்கியது. அந்த
மழை பெரும் மழை ஆகிற்று. சுமார் 60 ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து மழை
கொட்டியது.
இதனால் பூமி குளிர்ந்து கடல்கள் தோன்றின. அக்காலத்தில் நிலப்பரப்பு இப்போது
உள்ளது போல பல கண்டங்களாக பிரிந்திருக்கவில்லை. ஒரே நிலப்பரப்பாக
இருந்தது. சுற்றிலும் கடல் சூழ்ந்திரின்தது, பிறகு நிலப்பரப்பு உடைந்து
மெல்ல மெல்ல நகர்ந்து கண்டங்கள் ஆகின. பூமி தோன்றி 150 கோடி ஆண்டுகளுக்கு
பின் அதில் உயிரினங்கள் தோன்றின. முதல் முதலில் தோன்றிய உயிரினம் கடல் பாசி
என்று கருதப்படுகிறது.
பிறகு ( ஏறத்தாள 35 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் ) தரையில் ஊர்ந்து செல்ல
கூடிய பிராணிகள் தோன்றின. டினோசார் என்று அழைக்க படும் பல்லிகள் 10 கோடி
ஆண்டுகள் பூமியில் வாழ்ந்ததாகவும், அவை ஒரு கோடி ஆண்டுகளுக்கு முன் அழிந்தி
போனதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.
மனிதன் தோன்றியது எப்போது?
இறைவன் படைத்த ஆதாம் ஏவாள் மூலம் மனித இனம் தோன்றி வளர்ந்ததாக கிறிஸ்துவர்களின் மறை நூல் கூறுகிறது. மனிதனை முழு மனிதனாகவே இறைவன்
படைந்தான் என்பது இஸ்லாமிய மறை மொழி.
மனிதனின் பரிணாம வளர்ச்சி பற்றி, ஆங்கில விஞ்ஞானியான டார்வின் பல
ஆராய்சிகள் செய்து, 1859 ஆம் ஆண்டில் தன் முடிவுகளை வெளியிட்டார்.
அவருடைய ஆராய்ச்சியின் படி , சுமார் 45 கோடி ஆண்டுகளுக்கு முன், பூமியில்
உயிர் வாழ்க்கை தொடங்கியது. முதுகெலும்பு உள்ள சில பிராணிகளும், இலை இல்லாத
சில தாவரங்களும் அப்போது உருவாகின. இறகில்லாத சில பூச்சிகளும் உண்டாகின. இதை
தொடர்ந்து நிலத்தில் ஊர்ந்து வாழும் முதலை, பல்லி, பாம்பு, ஆமை போன்ற (
ஊர்வன இனத்தை சேர்ந்த பிராணிகள் ) உண்டாகின. விலங்குகள் இனமும், தாவர
இனமும் பெருகின. மாமிசம் தின்னும் பிராணிகள் தோன்றின. ஊர்ந்து செல்லும்
பிராணிகளில் இருந்து சில பாலுடிகள் உண்டாகின.
ஊர்ந்து செல்லும் பிராணிகள் சிலவற்றுக்கு இறகுகள் முளைத்து, சில வகை
பறவைகள் உண்டாகின. யானை, காண்டபிருகம், பன்றி போன்ற மிருகங்களின்
முன்னோடிகள் தோன்றின. வால் இல்லாத குரங்குகள் உருவாகியது. தோற்றத்தில்
மனிதனை போல உள்ள குரங்குகள் பெருகின. மேலும் வளர்ச்சி அடைந்து சட்ட்று
பெரிய மூளையும், கூர்மையான கண்களும், திறமையான கைகளும் உடையனவாக
உருமாறியது.
இந்த குரங்குகளில் இருந்து தோன்றியவர்களே மனிதர்கள். இதுவே டார்வின் சித்தாந்தம்.
 |
| Charles Darwin |
குரங்கில் இருந்து மனிதன் நேரடியாக தோன்றி இருக்க முடியாது என்றும்,
இக்குரங்குகளும் ஒரு பொதுவான மூதாதையில் இருந்து தோன்றி இருக்க வேண்டும்
என்றும் வேறு சில விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
பொதுவாக " குரங்கில் இருந்து பிறந்தவன் மனிதன் " என்ற கொள்கை உலகம்
முழுவதும் பரவலாக ஒப்புகொள்ளபடுகிறது. மனிதனை போல தோற்றம் கொண்ட குரங்குகள்
தோன்றி ஒரு கோடி ஆண்டுகள் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. குரங்கில்
இருந்து மனிதன் தோன்றி சுமார் 10 லட்சம் ஆண்டுகள் ஆகின்றன.
ஆரம்பத்தில் மனிதன் காட்டுமிராண்டி போலவே வாழ்ந்து வந்தான். உணவு தேடுவதே
அவன் வேலையாக இருந்தது. பிறகு கொடிய மிருகங்களிடம் இருந்து தன்னை பாது
காத்துக்கொள்ள வேட்டையாடினான். இறைச்சியை சுடவும், குளிரில் இருந்து தன்னை
காத்துகொள்ளவும் நெருப்பை பயன் படுத்தினான். மெதுவாக மனிதனில் நாகரிகம்
வளர்ந்தது. உலோக காலம் உலகின் போக்கையே மாற்றியது என்று கூறலாம். மனித
வாழ்க்கை, நாகரிகம் ஆகிய அனைத்தும் மாறின, நாகரிகம் வெகு வேகமாக வளர
தொடங்கியது என்றும் கூறலாம்.
Posted by
Anandhan Rajaraman
பல மொழிகள் வந்தாலும்,
புதிய மொழிகள் புகுந்தாலும்,
தமிழனே நீ மறந்திடாதே
உன்னை ஈன்றெடுத்த
தமிழ் மண்ணின் செம்மொழியான
தமிழினை நீ மறந்திடாதே...!
Posted by
Anandhan Rajaraman
Tuesday, July 10, 2012
நாம் பயணிக்கும் பாதை ஒருநாளும், ஒருநாள் போல் மற்றொருநாள் இருப்பதில்லை. கவனிக்க யாருமற்று, எண்ணற்ற மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கின்றன.
அலுவலகம் பயணிக்கும் பாதையொன்றில் நிகழ்ந்த அனுபவம் தான் இந்த கட்டுரையின் தொடக்கம்.
பள்ளிக்கரணை - துரைப்பாக்கம் இணைப்புச்சாலை - அலுவலகம் செல்ல ஒவ்வொரு நாளும் கடந்து செல்லும் பாதை, "சதுப்பு நில வனப்பகுதி" "பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி" போன்ற அறிவிப்பு பலகைகளும் "பறவைகள் வாழிடம் -இங்கு குப்பை கொட்டாதீர்கள்" என தென்சென்னையின் மிகப்பெரிய குப்பைமேட்டின் முகப்பில் வைக்கப்பட்டிருக்கும் "நையாண்டி" பலகைகளும் நிரம்பிய சாலை. இருபுறமும் சதுப்பு நிலம் - அதாவது நீரும் மண்ணும் இணைந்து சகதிக்குழம்பு சமைத்திருக்கும் நிலம். அட்டகாசமாக போடப்பட்டிருக்கும் இந்த சாலையில் பயணிக்கையில் வேகம் எவ்வளவு என கவனிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. கோரைப்புற்களும், அதில் கூடு கட்டி வாழும் பறவையினங்களும் நிரம்ப காட்சி தரும் இந்த நூறு அடி சாலையின் மீதான பயணம். ஆக்கிரமிப்புகள் போக எஞ்சியிருக்கும் இந்த நிலப்பகுதி தான் ஆக்கிரமிப்புகள் ஏற்படும் முன்பு சென்னையின் வெள்ளநீர் வடிகால் என்பது கூடுதல் தகவல். இந்த சதுப்பு நிலத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருக்கும் ஒவ்வொரு கட்டடமும் சென்னையில் குறிப்பாக தென்சென்னையில் வெள்ளம் வரும் போதெல்லாம் சபிக்கப்பட வேண்டியவைகள்.
இந்த சாலை வழியாகத்தான் தினமும் பயணிக்கிறேன். எந்த அசோகர் நட்டாரோ தெரியாது, வலப்புற சாலையோரம் வரிசையாய் மரங்கள் நடப்பட்டிருக்கும். இடப்புறம் அழகாக(?) குப்பை கொட்டி வைத்திருப்பார்கள்.
குப்பை கொட்டுவதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் இடப்பற்றாக்குறையோ இல்லை வேறு என்ன குறையோ இங்கு சாலையில் கொட்டி வைத்திருக்கிறார்களே என பலமுறை யோசித்ததுண்டு. கடந்த இரு வாரங்களாகத்தான் அதன் சூட்சமம் புரியத் தொடங்கியது. மேடாக கொட்டியிருந்த குப்பைகளை எல்லாம் நிரவியிருக்கிறார்கள். கிட்டத்தட்ட சாலையை விட்டு இருபது அடி அகலத்திற்கு நிரவி சாலை மட்டத்திற்கு சமன் செய்துள்ளார்கள். இன்னும் தெளிவாக சொல்வதென்றால் சாலையின் இடப்புறம் ஆக்கிரமித்திருக்கிறார்கள். அங்கங்கே இருபுறமும் நீர் செல்ல அமைக்கப்பட்டிருக்கும் குழாய்களின் அருகிருந்து பார்க்கும் போது இது நன்றாக தெரியும்.
இன்னும் சில வாரங்களில் நிரவப்பட்டிருக்கும் இந்த குப்பைகளின் மீது மெல்ல மண் கொட்டி நிலமாக்குவார்கள் , பின்னர் அங்கொன்றும் இங்கொன்றுமாக யாரவது குடிசை போடுவார்கள், குடிசைகள் பின்னர் "பெட்டிக்கடைகள்" "பலரசக்கடைகள்" "பலசரக்குக்கடைகள்" என விற்பனை மையங்களாகும். குடிசைகள் திடீரென "கான்க்ரீட்" கட்டடங்களாகும். மின்வசதி, குடிநீர்வசதி எல்லாம் அரசாங்க அலுவலகங்கள் வழங்கும். சில ஆண்டுகளில் இந்த இடப்புற சாலை முழுக்க கட்டடங்கள் நிரம்பி இருக்கும்.அதாவது முறைப்படி ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும்!
இதெல்லாம் அதீத கற்பனை, வீண் பயம் என்பவர்களுக்கு சொல்லவிரும்பவது இதுதான். "நில ஆக்கிரமிப்பு செய்வதில் நம் தாத்தா காலத்திய முறையிது". தமிழகத்தில் நாம் தொலைத்த பல்லாயிரக்கணக்கான ஏரிகள் இப்படித்தான் குடியிருப்பு பகுதிகள் ஆயின.
தன் நிலை விளக்கும் படங்கள் சில!
பள்ளிக்கரணை சதுப்புநில காடுகள் பற்றி விரிவாக அறிய இங்கு சொடுக்கவும்
Posted by
Anandhan Rajaraman
என் தனிமை காட்டில் பொழிகிறது கண்ணீர் மழை தினம் தினம் . ஒவ்வொரு துளியும் பிரதிபலிக்கிறது உன் நினைவுகளை :( :( :(
Posted by
Anandhan Rajaraman
Sunday, July 8, 2012
மழலை குழந்தைகளின் சிரிப்பில் இறைவனை காணும் வரம், எந்த கோவிலுக்கு சென்றாலும் வராது...!
Posted by
Anandhan Rajaraman
விரட்டிக் கொண்டேயிருக்கிறது வாழ்க்கை, நின்று எதிர்க்க எத்தனை தடவை நினைத்தும், முடியாமல் ஓடிக் கொண்டேயிருக்கிறேன் நான் ...!
Posted by
Anandhan Rajaraman
Tuesday, July 3, 2012
உன்னை சுகமாய் சுமப்பதாக சொல்லி கொண்ட
என் இதயம் , நீ எனக்கு இல்லை என்றதும் கனக்கிறதே ஏன்?
Posted by
Anandhan Rajaraman
Saturday, June 30, 2012
மழைத்துளிகள் மண்வாசனையை எழுப்பி விடுவதுபோல.
இருவுகளில் உன்னை பற்றிய நினைவுகளும், கனவுகளும்
என் காதலை எழுப்பிவிடுகிறது :) :) :)
Posted by
Anandhan Rajaraman
Friday, June 22, 2012
உன்னை பற்றி நான் கவிதை எழுத பயன்படுத்திய பேனாவும், என் கவிதையை படித்துவிட்டு அழுகிறது, ஆனால் இந்த உலகமோ " Pen ல ink லீக் ஆவுதுடா முண்டம் என்று திட்டுகிறது...!!
Posted by
Anandhan Rajaraman
Thursday, June 21, 2012
எத்தனை முறை ரசித்தாலும் ஒவ்வொரு முறையும் புதிதாய் தெரியும் மழை போலவே, நீயும் :) :) :)
Posted by
Anandhan Rajaraman
Wednesday, June 20, 2012
என் கவிதைகளை படித்த பலர் என்னை பார்த்து
"என்ன காதல் தோல்வியா" என்று
கேட்கிறார்கள்....
அவர்களுக்கு நான் எப்படி புரிய வைப்பேன்,
என் கவிதைகளுக்கு காரணம் காதல் அல்ல
நட்பு என்று ???
Posted by
Anandhan Rajaraman
Sunday, June 17, 2012
உங்கள் கை பிடித்து நடை பழகவில்லை,
கருத்துக்களை அதிகம் பகிர்ந்ததில்லை,
அன்பாய் அதிகம் பேசியதில்லை,
அன்று நான் வாங்கிய அடிகளுக்கு
இன்றுதான் அர்த்தம் புரிகிறது, நீங்கள்
என்னை அடிக்கவில்லை செதுக்கி
உள்ளீர்கள் என்று.......
உங்களை இதுவரையில் அண்ணாந்து பார்த்தே
வளர்ந்து விட்டேன். இன்று பார்க்கையிலும்
உங்கள் உயரம் உயருது....
வேறுபட்ட தந்தைகளுள் என் தந்தையும் ஒருவர் :) :) :)