பிறந்தநாள் நினைவுகள்

ஒரு வருடம் பின் நோக்கி சென்றேன்
என்னை பசுமையான நினைவுகள்
வரவேற்றது......
நம் வகுப்பறைக்குள் நுழைந்தேன்.
அங்கு நட்பு  என்னும் பாச வலையில்
சிக்கியபடி என்னை போல் ஒருவன்.........
அவனை சுற்றி வெடித்து சிதறிய
வண்ண இதழ்கள்......
அவன் முன் கத்தி கதறியபடி
கல்லூரி முதல்வர்.
இதை எதையும் கண்டு கொள்ளாமல்
கேக்கிற்கு  சண்டைபோடும் பின்
வரிசை நண்பர்கள்...........
முடிவு அனைவரும் வெளியேற்றப்பட்டனர்  ..........
பெரிதும் பரிட்சய படாத அவனுக்காக
குப்பைகளை சுத்தம் செய்தனர்
சக வகுப்பு மாணவிகள்.........
நன்றிகள் குட சொல்லாத அவனுக்கு அப்போது
தான் புரிந்தது
ஆண்பால் பெண்பால் இருவரும்
நட்பால் இணையலாம் என்று........

0 comments:

Post a Comment

வணக்கம்

என் வலைப்பூவிற்கு வந்துள்ள உங்களை மனமார வரவேற்கிறேன்!

என்னை பற்றி !

My photo
சிறிது அறிவும், நகைச்சுவை உணர்வும், ரசனையான வாழ்வும் சேர்ந்த சித்திரம்!