கல்லூரி

நம் கல்லூரி வாழ்க்கை முடிந்து ஆனது
நான்கு மாதம். மீண்டும் கல்லூரிக்கு
நேற்று சென்று வந்தேன்.....

கல்லூரியில் பல மாற்றங்கள், முதல்

மாற்றம், மாணவனாய் பரிச்சயப்பட்ட
நான் நேற்று பழைய மாணவனாய்
அறிமுகம் செய்துகொண்டு உள்ளே
சென்றேன்.........

படிக்கட்டுகளில் முன்னோக்கி ஏறினேன்,

நம் கல்லூரி வாழ்க்கை என்னை பின்நோக்கி 
அழைத்தது.அதே படிக்கட்டுகளில் அமர்ந்து
பல நண்பர்களை வம்புகிளுததாய்
நினைவிகள்.......

என் கண்கள் தேடி சென்றது நம் வகுப்பறையை,

என்னை பார்த்து சிரித்துகொண்டே வரவேற்றது
என் இருப்பிடம். மௌனமொழி பேசி என்னிடம்
கேட்டது நீ மட்டும் தான் வந்தாய என்று ......

என் இருக்கையில் கிரிக்கி வைத்த நண்பர்களின்

பெயர்களை தொட்டு பார்த்தேன். என் கண்கள்
தானாய் கலங்கின.......

மெல்ல நடந்து கான்டீன் பக்கம் சென்றேன்.

ஒரு கூல் ட்ரிங்க்ஸ் வாங்கி ஒன்பது பேர் குடிக்கும்
போது கிடைத்த சுகம் தனியாக குடித்த போது
கிடைக்கவில்லை.......

நான் கெளம்பும் நேரம், கல்லூரியை ஏற இறங்க

பார்த்துவிட்டு திரும்பி நடந்தேன். என் உடல் 
மட்டுமே நடந்தது நினைவுகள் நம் கல்லூரியை சுற்றி
திரிந்தபடி  :( :( :(

0 comments:

Post a Comment

வணக்கம்

என் வலைப்பூவிற்கு வந்துள்ள உங்களை மனமார வரவேற்கிறேன்!

என்னை பற்றி !

My photo
சிறிது அறிவும், நகைச்சுவை உணர்வும், ரசனையான வாழ்வும் சேர்ந்த சித்திரம்!