உலகம் தோன்றியது எப்போது?

(  நண்பர்களே இதுவரை நமது வலைப்பூவில் எனது கவிதைகளையும் நான் படித்ததில் பிடித்த சில  தொகுப்புகளை மட்டுமே வெளியிட்டு வந்தேன். இன்று முதல் சுவடுகள் என்னும் தலைப்பில், உலகம் தோன்றியது முதல் இன்றுவரை நடந்த சில வரலாற்று சுவடுகளை உங்களுடன் பகிர்துகொள்ள கொள்ள விரும்புகிறேன். இணைந்திருங்கள்.  )

ஏறத்தாள 450 கோடி ஆண்டுகளுக்கு முன் பூமி தோன்றியதாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். சூரியனில் இருந்து பிரிந்து வந்த பொருள் இறுகி, பூமியாகியது. ஆரம்பத்தில் பூமியும் சூரியனை போல சுடும் வெப்பத்துடன் இருந்தது. பிறகு வெப்பம் குறைந்து பூமி மீது மழை பொழிய தொடங்கியது. அந்த மழை பெரும் மழை ஆகிற்று. சுமார் 60 ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து மழை கொட்டியது.

        இதனால் பூமி குளிர்ந்து கடல்கள் தோன்றின. அக்காலத்தில் நிலப்பரப்பு இப்போது உள்ளது போல பல கண்டங்களாக பிரிந்திருக்கவில்லை. ஒரே நிலப்பரப்பாக இருந்தது. சுற்றிலும் கடல் சூழ்ந்திரின்தது, பிறகு நிலப்பரப்பு உடைந்து மெல்ல மெல்ல நகர்ந்து கண்டங்கள் ஆகின. பூமி தோன்றி 150 கோடி ஆண்டுகளுக்கு பின் அதில் உயிரினங்கள் தோன்றின. முதல் முதலில் தோன்றிய உயிரினம் கடல் பாசி என்று கருதப்படுகிறது.

       பிறகு ( ஏறத்தாள 35 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் ) தரையில் ஊர்ந்து செல்ல கூடிய பிராணிகள் தோன்றின. டினோசார் என்று அழைக்க படும் பல்லிகள் 10 கோடி ஆண்டுகள் பூமியில் வாழ்ந்ததாகவும், அவை ஒரு கோடி ஆண்டுகளுக்கு முன் அழிந்தி போனதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.

மனிதன் தோன்றியது எப்போது?

    இறைவன் படைத்த ஆதாம் ஏவாள் மூலம் மனித இனம் தோன்றி வளர்ந்ததாக கிறிஸ்துவர்களின் மறை நூல் கூறுகிறது. மனிதனை முழு மனிதனாகவே இறைவன் படைந்தான் என்பது இஸ்லாமிய   மறை மொழி.

         மனிதனின் பரிணாம வளர்ச்சி பற்றி, ஆங்கில விஞ்ஞானியான டார்வின் பல ஆராய்சிகள் செய்து, 1859 ஆம் ஆண்டில் தன் முடிவுகளை வெளியிட்டார்.  அவருடைய ஆராய்ச்சியின் படி , சுமார் 45 கோடி ஆண்டுகளுக்கு முன், பூமியில் உயிர் வாழ்க்கை தொடங்கியது. முதுகெலும்பு உள்ள சில பிராணிகளும், இலை இல்லாத சில தாவரங்களும் அப்போது உருவாகின. இறகில்லாத சில பூச்சிகளும் உண்டாகின. இதை தொடர்ந்து நிலத்தில் ஊர்ந்து வாழும் முதலை, பல்லி, பாம்பு, ஆமை போன்ற ( ஊர்வன இனத்தை சேர்ந்த பிராணிகள் ) உண்டாகின. விலங்குகள் இனமும், தாவர இனமும் பெருகின. மாமிசம் தின்னும் பிராணிகள் தோன்றின. ஊர்ந்து செல்லும் பிராணிகளில் இருந்து சில பாலுடிகள் உண்டாகின.

          ஊர்ந்து செல்லும் பிராணிகள் சிலவற்றுக்கு இறகுகள் முளைத்து, சில வகை பறவைகள் உண்டாகின. யானை, காண்டபிருகம், பன்றி போன்ற மிருகங்களின் முன்னோடிகள் தோன்றின. வால் இல்லாத குரங்குகள் உருவாகியது. தோற்றத்தில் மனிதனை போல உள்ள குரங்குகள் பெருகின. மேலும் வளர்ச்சி அடைந்து சட்ட்று பெரிய மூளையும், கூர்மையான கண்களும், திறமையான கைகளும் உடையனவாக உருமாறியது.
இந்த குரங்குகளில் இருந்து தோன்றியவர்களே மனிதர்கள். இதுவே டார்வின் சித்தாந்தம். 
 Charles Darwin


         குரங்கில் இருந்து மனிதன் நேரடியாக தோன்றி இருக்க முடியாது என்றும், இக்குரங்குகளும் ஒரு பொதுவான மூதாதையில் இருந்து தோன்றி இருக்க வேண்டும் என்றும் வேறு சில விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

     பொதுவாக  " குரங்கில் இருந்து பிறந்தவன் மனிதன் "  என்ற கொள்கை உலகம் முழுவதும் பரவலாக ஒப்புகொள்ளபடுகிறது. மனிதனை போல தோற்றம் கொண்ட குரங்குகள் தோன்றி ஒரு கோடி ஆண்டுகள் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. குரங்கில் இருந்து மனிதன் தோன்றி சுமார் 10 லட்சம் ஆண்டுகள் ஆகின்றன.
        ஆரம்பத்தில் மனிதன் காட்டுமிராண்டி போலவே வாழ்ந்து வந்தான். உணவு தேடுவதே அவன் வேலையாக இருந்தது. பிறகு கொடிய மிருகங்களிடம் இருந்து தன்னை பாது காத்துக்கொள்ள வேட்டையாடினான். இறைச்சியை சுடவும், குளிரில் இருந்து தன்னை காத்துகொள்ளவும் நெருப்பை பயன் படுத்தினான். மெதுவாக மனிதனில் நாகரிகம் வளர்ந்தது. உலோக காலம் உலகின் போக்கையே மாற்றியது என்று கூறலாம். மனித வாழ்க்கை, நாகரிகம் ஆகிய அனைத்தும் மாறின, நாகரிகம் வெகு வேகமாக வளர தொடங்கியது என்றும் கூறலாம்.

0 comments:

Post a Comment

வணக்கம்

என் வலைப்பூவிற்கு வந்துள்ள உங்களை மனமார வரவேற்கிறேன்!

என்னை பற்றி !

My photo
சிறிது அறிவும், நகைச்சுவை உணர்வும், ரசனையான வாழ்வும் சேர்ந்த சித்திரம்!