சிலுவை போர்கள்


மத்திய காலத்தில் ஐரோப்பாவில் கிறிஸ்துவர்கள் மிகுந்திருந்தனர். இயேசு கிறிஸ்துவுடன் தொடர்புள்ள இடங்கள், புனித இடங்களாக கருதப்பட்டன. அந்த இடங்களுக்கு யாத்திரை செல்வதை கிறிஸ்துவர்கள் புனிதமாக கருதினர். கி.பி. 637 -ல் ஜெருசலேமை முஸ்லிம்கள் கைபற்றினர். எனினும், ஆட்சி நடத்திவந்த கலிபாக்கள் மத நல்லிணக்கத்துடன் செயல்பட்டதால், கிறிஸ்துவர்களுக்கு எந்த பிரச்னையும் எழவில்லை.

            கி.பி 1086 -ல் துருக்கியர்களின் வசம் ஜெருசலேம் கைமாறியதும் பிரச்சனை எழுந்தது. புனித திருத்தலங்களுக்கு சென்ற கிறிஸ்துவர்கள் கொடுமைப் படுத்தப்பட்டனர். தேவாலயங்கள், குதிரை லாயங்கலாக மாற்றப்பட்டன. இதனால் கிறிஸ்தவர்கள் ஒன்றுகூடி புனித ஸ்தலங்களை மீட்க போர் தொடுக்க தீர்மானித்தனர். ஐரோப்பாவில் உள்ள கிறிஸ்துவர்கள், திருசபயினர், மன்னர்கள், மதத்தலைவர்கள் இதில் பங்கு கொண்டனர்.

முதலாம் சிலுவை போர்

இது 1907 -ம் ஆண்டில் நடந்தது. இதில் சுமார் 40 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். ஆனால், இவர்கள் முறையான பயிற்சிகள் பெறாதவர்கள். எனினும் ஜெருசலேமை இவர்கள் கை பற்றினர். சுமார் 80 ஆண்டுகள் ஜெருசலேம் கிறிஸ்துவர்கள் ஆதிக்கத்தில் இருந்தது.

இரண்டாம் சிலுவை போர்


கி.பி 1101 -ம் ஆண்டில் ஜெருசலேம் அரசர் மரணம் அடைந்தார், குழப்பங்கள் ஏற்பட்டன. கிறிஸ்துவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் நடந்த போரில் முஸ்லிம்கள் வெற்றிபெற்றனர். 1187 -ல் சலாடின் என்ற போர் வீரர், ஜெருசலேமை கைப்பற்றி அதன் சுல்தானாக பொறுபேற்றார். சுமார் 50 ஆண்டு காலம் ஜெருசலேம் முஸ்லிம்கள் வசம் இருந்தது.

மூன்றாம் சிலுவை போர்  ( கி.பி 1189 - 1192 )


இதில் ஐரோப்பிய மன்னர்கள் பலர் கலந்து கொண்டனர். இதில் கிறிஸ்துவர்களுக்கு தோல்வி ஏற்பட்டது. ஆயினும், சிறிய கடற்கரை ஓரமான, ஜெருசலேமிற்கு கிறிஸ்துவர்கள் செல்லலாம் என்று உடன்பாடு ஏற்பட்டது. நூறு ஆண்டுகளுக்குப் பின், கிறிஸ்துவர்கள் பாலஸ்தீனத்தில் இருந்தும் சிரியாவில் இருந்தும் வரட்டி அடிக்கப் பட்டனர்.

நான்காம் சிலுவைப் போர்  ( கி.பி 1203 )

கி.பி 1203 -ல் இஸ்தான்புல் நகரை கிறிஸ்துவர்கள் கைப்பற்றினர். அனால் அதை முஸ்லிம்கள் மீட்டனர். 1212 -ம் ஆண்டில் பிரான்ச் நாட்டில் ஆடு பெயப்பவனாக இருந்த ஸ்டீபன் என்பவன், " துரிகியர்களை அழிக்க கடவுளால் அனுப்பப்பட்டவன் நான்" என்று கூறிக்கொண்டு, சுமார் 30 ஆயிரம் சிறுவர், சிறுமிகளை கொண்ட படையை திரட்டினான். இரண்டு கப்பல்களில் இந்த படை கிளம்பியது. அனால், இந்த இரண்டு கப்பல்களும் கடலில் மூழ்கின. உயிர் பிழைத்து நீந்தி கரை சேர்ந்தவர்களும் அடிமைகளாக விற்கப்பட்டனர். இந்த நிகழ்ச்சி "குழந்தைகள் சிலுவை போர்" என்று வரலாற்றில் குறிப்பிடப்படுகிறது.

கடைசி சிலுவைப் போர் ( கி.பி 1683 )

போப் ஐந்தாம் பயஸ் இதனை தொடங்கி வைத்தார். ஸ்பெயின், வெனிஸ் ஆகியவற்றுடன் சேர்ந்து ஆதரவாளர்களை திரட்டினார். லேப்பண்டோ குடா என்ற இடத்தில், முஸ்லிம்களின் கப்பல் படை தோற்கடிக்கப் பட்டது.  போப் பைஸ், ௧௬ ஆண்டுகள் போர் புரிந்து, வெனிஸ், போலந்து, ஆஸ்திரியா, ரஷ்யா, பிரான்ஸ் உதவியுடன் துர்க்கியர்களை வெளியேற்றினார். இதன் மூலம் தான் போப் ஆண்டவரின் செல்வாக்கு ஓங்கியது.

0 comments:

Post a Comment

வணக்கம்

என் வலைப்பூவிற்கு வந்துள்ள உங்களை மனமார வரவேற்கிறேன்!

என்னை பற்றி !

My photo
சிறிது அறிவும், நகைச்சுவை உணர்வும், ரசனையான வாழ்வும் சேர்ந்த சித்திரம்!