அலெக்சாண்டர் ( கி.மு. 356 - 323 )

( நமது வலைப்பூவின் Likes எண்ணிக்கை நூறை எட்டியுள்ளது. Likes கொடுத்த மற்றும் பின்பற்றும்நல்ல உள்ளங்களுக்கு நன்றி. மிக விரைவில், எனக்கு சிறிது அளவு  பரிட்சய பட்ட " .net -ஐ "  தமிழில் கற்க ஒரு புதிய வலைப்பூவை தொடங்க உள்ளேன். இணைந்திருங்கள் )




             கிரேக்க மன்னரான அலெக்சாண்டர், உலகில் இதுவரை தோன்றிய மாவிரர்களில் தலைசிறந்தவராக போற்றப்படுகிறார். 20 வயதில் மன்னராகி 32 வயதுக்குள் பல நாடுகளை வென்ற அலெக்சாண்டர், வரலாற்றில் அழியா இடம் பெற்றவர்.

           கிரேக்கத்தில் மாசிடோனியா நாட்டை ஆண்டு வந்த பிலிப் என்ற மன்னரின் மகன் அலெக்சாண்டர். அவர் கி.மு. 356 -ம் ஆண்டில் பிறந்தார். சிறுவயதிலேயே சிறந்த வீரராக திகழ்ந்தார். குதிரை சவாரி செய்வதில் அவருக்கு எவரும் நிகரில்லை என்று புகழ் பெற்றவர்.

     கிரேக்க நாட்டின் மாபெரும் சிந்தனையாளர்களில் ஒருவரான அரிஸ்ட்டாட்டில் அலெக்சாண்டரின் குருவாக அமர்த்தப்பட்டார். இதனால் அலெக்சாண்டர்  சிறந்த வீரராக மட்டும் இன்றி சிறந்த ராஜதந்திரியாகவும், நீதிமானாகவும் திகழ்ந்தார்.

       பிலிப் மன்னர் ஒரு போரில் கொலை செய்யப்பட்டார்.  அதை தொடர்ந்து அலெக்சாண்டர் மன்னரானார்.அப்போது அவருக்கு வயது 20.நாட்டின் வடப்பகுதியில் அப்போது கலவரங்கள் நடந்தது.அலெக்சாண்டர் அதை அடக்கினார். கிரேக்கம் முழுவதும் அவர் ஆட்சிக்குள் வந்தது. கிரேக்க நகரத்தை வெளி நாடுகளிலும் பரப்ப நினைத்த அலெக்சாண்டர் பாரிஸ் மீது படை எடுத்தார். அவருடைய படையில் 20 ஆயிரம் காலாட்படையும், 5 ஆயிரம் குதிரை படையினரும் இருந்தனர். பாரிஸ் மன்னர் தோல்வி அடைந்தார். சிறை பிடிக்க பட்ட அவருடைய தாயையும் , மனைவியையும் கண்ணியத்துடன் நடத்தினார் அலெக்சாண்டர். பிறகு சிரியா, எகிப்த் ஆகிய நாடுகளை கைப்பற்றினார். எகிப்தில் தன் பெயரில் அலேக்சன்றியா என்ற நகரத்தை உருவாக்கினார். அவர் வென்ற நாடுகளில் எல்லாம் கிரேக்கர்களை குடியேற செய்தார். கிரேக்கர்களுக்கு பாரசிக பெண்களை திருமணம் செய்துவைத்தார். பிறகு ஆப்கானிஸ்தானை கைபற்றிய அலெக்சாண்டரின் பார்வை இந்தியா பக்கம் திரும்பியது.
      
          அந்த சமயத்தில் இந்தியாவில் சிந்து சமவெளி பகுதியை பல சிற்றரசர்கள் ஆண்டு வந்தனர். அலெக்சாண்டர் கி. மு. 326 -ல் சிந்து ஆற்றை கடந்து இந்தியாவிற்குள் நுழைந்தார். அலெக்சாண்டரின் போர் திறனை நன்கு அறிந்திரிந்த தட்சசீல மன்னன், அவரை வரவேற்று நட்பு கொண்டான். ஆனால் புருசோதமர் என்ற மன்னன் அலெக்சாண்டரை எதிர்த்தார். ஜீலம் நதி கரையில் இரு படையினரும் மோதினர். அதில் வழக்கம் போல் அலெக்சாண்டர் வென்றார்.

       தோல்வி அடைந்த புருஷோதமரை பார்த்து " நான் உங்களை எவ்வாறு நடத்த வேண்டும் என்று நினைகிறிர்கள் " என்று அலெக்சாண்டர் கேட்டார். "என்னை ஒரு அரசன் போல நடத்த வேண்டும்"என்று புருசோதமர் தைரியமாக கூறினார்.  அவருடைய வீரத்தை பாராட்டிய அலெக்சாண்டர் தான் கைப்பற்றிய நாட்டை புருஷோதமருக்கே திருப்பி கொடுத்தார். மேலும் பல நாடுகளை வெல்ல வேண்டும் என்று அலெக்சாண்டர் விரும்பினார். அனால் பல ஆண்டுகள் போர் புரிந்து சலித்து போன போர் வீரர்கள் தாய்நாட்டிற்கு செல்ல வேண்டும் என்று கழகத்தில் ஈடுப்பட்டனர். இதனால் அலெக்சாண்டர் வேறு வலி இன்றி கிரேக்கம் திரும்பி செல்ல முடிவு செய்தார். போர் வீரர்கள் பலர் தரை வழியாகவும், சிலர் கடல் வழியாகவும் தாயகம் திரும்பினர். அலெக்சாண்டர் தரை மார்கமாக திரும்பி சென்ற போது, பாபிலோன் நகரில் விஷ ஜுரம் வந்து மரணம் அடைந்தார். அப்போது அவருக்கு வயது 32.

1 comments:

Doha Talkies July 24, 2012 at 5:26 AM  

மிகவும் அருமை

சமயம் கிடைக்கும் போது இந்த தம்பியின் ப்ளாக் பக்கம் வந்துட்டு போங்க நண்பரே...
http://dohatalkies.blogspot.com/2012/07/schindlers-list_1072.html

Post a Comment

வணக்கம்

என் வலைப்பூவிற்கு வந்துள்ள உங்களை மனமார வரவேற்கிறேன்!

என்னை பற்றி !

My photo
சிறிது அறிவும், நகைச்சுவை உணர்வும், ரசனையான வாழ்வும் சேர்ந்த சித்திரம்!